Wednesday, August 31, 2011

அன்னையே!


பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய் 
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ 
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை 
மனதிலும் நிஜத்திலும்  வலிகள் தெரிவதில்லை  
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்

  

சுதந்திரம்

அன்று சிலர் குண்டை மார்பில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் பெறுவதற்கு 
இன்று சிலர் குண்டை கையில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் இழப்பதற்கு 
என்று இந்த சமுதாயம் திருந்துமோ! இல்லையேல் 
அவர்களால் அனைத்தும் அழியுமோ!!