தென்னையின் நீரென சிறுஊற்றில் பிறந்தாய்
தமிழன்னையின் சேயென தரணியில் வளர்ந்தாய்
பெண்மையின் அன்பை ஊரெலாம் பொழிந்தாய்
கணவனான கடலில் கவின்மிக கலந்தாய்
இடையில் பல இன்னல்களும் இருந்தன.
பெண்மையின் இருப்பிடமாய் பேருருகொண்ட உன்னை
பேதைகள் பலர் பெருமுயற்சியால் தடுத்தனர்
இவ்வன்னை மடியில் வளரத் தடைபல
அத்தடைகளை கோபம் கொண்டு உடைக்கவில்லை
பெண்மையின் அங்கமே பொறுமை ஆதலலோ ?
உன்னை மீட்க பொறுமையுடன் போரிடுகிறோம்
உன்னால் வளர்ந்ததெங்கள் எண்ணங்கள் ஆதலால்
பொலிவுடைய பொன்னி என்னும் பெண்ணே
எங்களை பேணும் உன்னை வளபடுத்துவோம்
நீ வளரும் காலம் வெகுஅருகில்.