Sunday, July 12, 2020

கால கவிதையில் நீங்கா வரிகளாய் நா. முத்துகுமார்

மழலை இசை
மனதில் நிறைய

இதய வார்த்தைகள்
இதமாய் வருட

அழகின் மகத்துவம்
அனைத்திலும் திளைக்க

வெயிலின் விளையாட்டில்
இளம்நினைவுகள் மேலெழ

ஒற்றை காதலின்
உயிர் பூக்கள்
- கல்லறையில்

இல்லற நுழைவாயிலில்
காதலின் வருகை

மன நிறைவாய்
சாமானியனின் காதல்

தந்தையை தொழும்
வரிகளாய் தெய்வம்

கால கவிதையில்
நீங்கா வரிகளாய்
நா. முத்துகுமார்


No comments:

Post a Comment