Monday, December 26, 2016

காலை நேரம்

காலை  நேரம்
கரங்கள்
கூப்ப
கைகள்  தேடும்
கடவுள்

காலம்
கரைய
கனவுகள்
கவிதையாய்  உறையும்
நினைவில்

கவிதைகேனோ
மனம்  வரவில்லை
மனதில்  வர
இத்தனை காலம்

இயற்கை  எனும்
கவிதையில்
இனிமை  ததும்பும்

குழந்தை எனும்
கவிதையில்
குழைகின்ற இன்பம்

உறக்கம்  எனும்
கவிதையில்
உறைகின்ற நிறைவு

நட்பெனும்  எனும்
கவிதையில்
நிறைகின்ற  வாழ்வு

கவிதைக்காய்
ஏங்கும் மனம்
கவிதையாய்
வாழ  தினம்
நிலைக்குமோ இனும்